கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது ரத்து

Added : ஜன 15, 2020
Advertisement

சென்னை : வில் நீதிபதிகள் தேர்வில், வெற்றி பெற்றவரின் விண்ணப்பத்தை நிராகரித்த, அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஜாதி சான்றிதழை ஏற்று, தேர்வு முடிவை அறிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

சிவில் நீதிபதிகள் பதவிக்கு, ௨௦௧௮ ஜூலையில் முதல்கட்ட தேர்வும், ஆகஸ்டில் பிரதான தேர்வும் நடந்தது. இரண்டு தேர்வுகளிலும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஏ.கே.ஆனந்த் வெற்றி பெற்றார். சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டார். ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர் என, புதுச்சேரி அதிகாரி வழங்கிய சான்றிதழை அளித்தார்.அதை ஏற்க மறுத்த, அரசு பணியாளர் தேர்வாணையம், சொந்த ஊரில் இருந்து, உரிய அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று சமர்பிக்கும்படி உத்தரவிட்டது. சான்றிதழ் சமர்பிக்க, இரண்டு வார அவகாசம் கேட்டார். பின், விழுப்புரம் தாசில்தாரிடம் இருந்து, ஆன்லைன் வாயிலாக ஜாதி சான்றிதழ் பெற்று, ௨௦௧௮ நவம்பரில் அனுப்பினார்.

இதையடுத்து, ௨௦௧௯ ஜனவரியில் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. சிவில் நீதிபதிகள் பதவிக்கான விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக, ஆனந்துக்கு, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டது. நிராகரித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதிகள் வி.பாரதிதாசன், வி.பார்த்திபன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''விண்ணப்பத்தை நிராகரிப்பது என்ற முடிவு எடுக்கும் முன், செல்லத்தக்க ஜாதி சான்றிதழ், டி.என்.பி.எஸ்.சி., கையில் கிடைத்து விட்டது. தாமதத்தை காரணமாக்கி, தேர்வை மறுக்க முடியாது,'' என்றார்.இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அவசரகதியில், மனுதாரரின் விண்ணப்பத்தை, தேர்வாணையம் நிராகரித்துள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட முறையை பார்க்கும் போது, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் செயல்பாடு, நல்ல விதமாக தெரியவில்லை. தேர்வாணையத்தின் நடவடிக்கை, நியாயமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.ஜாதி சான்றிதழை, ௨௦௧௮ டிசம்பர், ௫ல் தேர்வாணையம் பெற்றுள்ளது. அன்றே நிராகரித்து உத்தரவும் பிறப்பித்துள்ளது. இது, தேவையற்றது. இரக்கமின்றி, கண்மூடித்தனமாக விண்ணப்பத்தை நிராகரிக்கும் முடிவை, தேர்வாணையம் எடுத்துள்ளது.அரசியலமைப்பு சட்ட அந்தஸ்து பெற்ற தேர்வாணையம், சட்ட பொறுப்பில் இருந்து விலகக் கூடாது. பணிக்காக விண்ணப்பிப்பவரின் அரசியலமைப்பு சட்ட உரிமையை, தேர்வாணையம் நெறிக்கும் விதத்தில் உள்ளது.

எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்ததை, ஏற்க முடியாது.அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் சமர்ப்பித்த ஜாதி சான்றிதழை ஏற்று, தேர்வு முடிவை, தேர்வாணையம் அறிவிக்க வேண்டும். இந்த தேர்வு நடைமுறையை, எட்டு வாரங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X