பாக்.,கில் கடும் பனிப்பொழிவு பனிச்சரிவில் சிக்கி 75 பேர் பலி

Added : ஜன 15, 2020
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், கடும் பனிப்பொழுவு மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட, பனிச்சரிவுகளில் சிக்கி, 75 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில், கடந்த மூன்று நாட்களாக மோசமான வானிலை நிலவி வருகிறது. பல பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கடும் பனிப்பொழிவால், பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வசதிகள் முடங்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 57 பேர் உயிரிழந்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தில், மழை மற்றும் பனிப்பொழிவால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களில் மொத்தம், 41 பேர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் சுமார், 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்திருப்பதால், நாட்டில் உள்ள சில பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X