பொது செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்டங்களில் பனி மூட்டம் அதிகமாகும்

Added : ஜன 15, 2020
Advertisement

சென்னை : தென்மாவட்டங்களில், பனி மூட்டம் அதிகமாக காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிந்து, முன் பனிக்காலம் நிலவுகிறது. இரவு முதல் முற்பகல் வரை பனி மூட்டமாக உள்ளது. நேற்று போகி பண்டிகை காரணமாக, பழைய பொருட்களை சாலைகளில் போட்டு, பலர் எரித்தனர். அதனால், பனிமூட்டமும், புகை மூட்டமும் சேர்ந்து, நேற்று காலை, 11:00 மணி வரை, வளிமண்டலத்தில் பனிப்புகை மற்றும் காற்று துகள்கள் மிதந்தன.சென்னையில், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தெரிவித்தது.

இந்நிலையில், 'வரும் நாட்களை பொறுத்தவரை, தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலுாரில், பனி மூட்டம் அதிகமாக காணப்படும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில், மிதமான பனிமூட்டமும், பகலில் வறண்ட வானிலையும் நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X