பூங்கா அமைப்பதில் மெத்தனம் ஓராண்டாக இழுத்தடிக்கும் நகராட்சி

Added : ஜன 15, 2020
Advertisement
 பூங்கா  அமைப்பதில்  மெத்தனம் ஓராண்டாக  இழுத்தடிக்கும்  நகராட்சி

செம்பாக்கம்:நிதி ஒதுக்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், செம்பாக்கம் நகராட்சி அதிகாரிகள், பூங்கா அமைக்கும் பணிகளை துவங்காமல் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.

செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட, திருமலை நகரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் அமைக்க, திருமலை நகர், ஐந்தாவது தெருவில், 14 கிரவுண்டு நிலம், செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற அமைப்பு திட்ட இயக்குனரால் ஒதுக்கப்பட்டது.

இந்த இடத்தில், 10 கிரவுண்டு நிலத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பொது கிணறு, ரேஷன் கடை, உடற்பயிற்சி கூடம், நுாலகம், சமுதாய கூடம் ஆகியவை கட்டப்பட்டன. மீதமுள்ள, 4 கிரவுண்டு நிலத்தில், சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தாம்பரம் தொகுதி, எம்.எல்.ஏ., நிதியில், 2019, பிப்ரவரியில், பூங்கா அமைக்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல், ஏற்கனவே உள்ள உடற்பயிற்சி கூடத்தின் புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகளுக்கு, 18.50 லட்சம் ரூபாய் என, 38.50 லட்சம் ரூபாய் ஒதுக்கி, 'டெண்டர்' விடப்பட்டது.

நிதி ஒதுக்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், தற்போது வரை, பூங்கா அமைக்கும் பணிகளை, நகராட்சி நிர்வாகம் துவக்கவில்லை. பூங்கா அமைக்க, பகுதிமக்கள் பலமுறை வலியுறுத்தியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இனியாவது பூங்கா அமைக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X