அரைகுறை பணியால் வாகன ஓட்டிகள் அவதி| Dinamalar

அரைகுறை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஜன 15, 2020
 அரைகுறை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

பம்மல்:பம்மல் அருகே, மின் வடம் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப் படாததால், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.

தாம்பரம், கடப்பேரியில் இருந்து, பம்மல் வரை, பூமிக்கு அடியில் மின் வடம் பதிக்கும் பணி, கடந்தாண்டு நடந்தது. அப்போது, பம்மல் அருகே, சென்னை புறவழிச்சாலை, அணுகு சாலையில் பள்ளம் தோண்டி, வடத்தை பதித்தனர்.பணி முடிந்தவுடன், மண்ணை கொட்டி மூடினர். ஆனால், சரியான முறையில் மூடாததால், சமீபத்தில் பெய்த மழையில், சாலை உள்வாங்கி, நீண்ட துாரத்திற்கு பள்ளமாகி விட்டது.

இதனால், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் விழுந்து, வாகன ஓட்டிகள் அடிபடுகின்றனர். கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் இறங்கினால், ஏற முடியாமல் தவிக்கின்றன.இரவு நேரத்தில், நிறைய பேர் விழுந்து காயமடைகின்றனர். புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பள்ளத்தை சரிசெய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X