சேவை பணியால் சேதமடைந்த சிவசாமி சாலை சீரமைக்கப்படுமா?| Dinamalar

சேவை பணியால் சேதமடைந்த சிவசாமி சாலை சீரமைக்கப்படுமா?

Added : ஜன 15, 2020
 சேவை பணியால் சேதமடைந்த சிவசாமி சாலை சீரமைக்கப்படுமா?

மயிலாப்பூர்:மயிலாப்பூரில், சேவை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாத தால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலம், 121வது வார்டுக்கு உட்பட்ட, மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து, ராயப்பேட்டை நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான சாலை.இச்சாலையில், சமீபத்தில், பாதாள சாக்கடை கட்டுமான பணிக்காக, குடிநீர் வாரியம் பள்ளம் தோண்டியது. பணி முடிந்து பல மாதங்களாகியும், புதிதாக சாலை போடப்படாததால், குண்டும் குழியுமாக, புழுதி பறந்து காட்சி அளிக்கிறது.

இதனால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளை சந்திக்கின்றனர். இது குறித்து, மாநகராட்சியிடம் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சாலையை ஆய்வு செய்து சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X