அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக கூட்டணி கட்சிகள் இடையே 'பொங்கல்!': நேற்று முதல் துவங்கியது அரசியல் சதுரங்கம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (38+ 64)
Advertisement
DMK,ADMK,BJP,Congress,பொங்கல்,திமுக,அதிமுக,திமுக,காங்கிரஸ், கூட்டணி

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, 'பொங்கல்' வைக்க துவங்கி உள்ளன. காங்கிரஸ் உடனான உறவு முறியலாம் என, தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு சூசகமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அ.தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள, பா.ஜ.,வை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்தில், நேற்று முதல் அரசியல் சதுரங்கம் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முதல், அ.தி.மு.க., தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க., தலைமையில் மற்றொரு கூட்டணியும் செயல்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி போன்றவை இடம் பெற்று உள்ளன. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, பல கட்சிகள் உள்ளன. இவ்விரு கூட்டணியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தல், உரசலை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், பெரியண்ணன் மனப்பான்மையோடு நடந்து கொண்டதாக, கூட்டணி கட்சிகள் புலம்பின. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,வும்; தி.மு.க., கூட்டணியில், காங்கிரசும் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளன. தை முதல் நாளான இன்று, தமிழர்கள் அனைவரும், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணிக்குள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, 'பொங்கல்' வைக்க துவங்கி உள்ளனர்.

உள்ளாட்சிகளுக்கு அடுத்த கட்ட தேர்தல் நடக்க வேண்டிய சூழ்நிலைல, ரெண்டு பெரிய கூட்டணிகள்லயும் வெட்டு குத்து விளையாட்டு தொடங்கிருச்சு. திமுக காங்கிரஸ் கூட்டணி புட்டுக்க போவுது; அதே மாதிரி அதிமுகவும் பிஜேபியும் பிரிய போவுது..னு காட்சி ஊடகத்ல பரபரப்பா பேசிக்கிறாங்க.

அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில், 'பயங்கரவாதிகளின் பயிற்சி கூடாரமாக, தமிழகம் மாறி வருகிறது. தி.மு.க., - காங்கிரஸ் துணையோடு, பயங்கரவாதிகள் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் செயல்படுகின்றனர்' என்றார். அவரது பேட்டி, அ.தி.மு.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சென்னையில் நேற்று கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணன் நல்லா இருந்த மனுஷன், ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை. ஜெயலலிதா காலத்திலிருந்தே, அரசை குற்றம் சொல்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் கருத்தை, பா.ஜ., கருத்தாக நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு ஒரு திட்டத்தையும், கொண்டு வரவில்லை. நாங்கள் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து, தமிழகத்திற்கு நிதிகளை பெற்றுள்ளோம். தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கை பராமரிக்க, முதல்வர் எடுத்த முயற்சிக்கு, மத்திய அரசு அங்கீகாரம் கொடுத்து விருது வழங்கியுள்ளது.

தனக்கு, மாநில தலைவர் பதவி கிடைக்காத விரக்தியின் வடிவமாக, பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சை பார்க்கிறோம். எங்கோ காட்ட வேண்டிய கோபத்தை, அவர் எங்கள் மீது காட்டுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில், பயங்கரவாதம் தலை துாக்காது; வேரோடு வீழ்த்தி விடுவோம். பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும், தமிழகத்தில் இடமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, பா.ஜ., மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் கூறியதாவது: தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தில் தான் அதிகம். காவல் துறை அதிகாரியை சுட்டுக் கொல்லும் அளவிற்கு, பயங்கரவாதிகள் வளர்ந்துள்ளனர். மாநில அமைச்சர், முதலில் அதன் ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, தனிப்பட்ட முறையில், 'பொன்.ராதாகிருஷ்ணன் அதை செய்தாரா, கூட்டணியில் இருக்காரா...' எனக்கூறுவது நாகரிகமானதல்ல. இவ்வாறு, அவர் கூறினார். இரு கட்சியினரும், மாறி மாறி வசைபாட துவங்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


காங்., உறவு முறிவு?

அதேபோல, தி.மு.க., - காங்., இடையேயும் மோதல் முற்றியுள்ளது. சில தினங்களுக்கு முன், தி.மு.க.,வை விமர்சித்து, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அது, தி.மு.க.,வினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக காங்., தலைவர் அழகிரி, நேற்று டில்லி சென்று, காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.

பின், அழகிரி கூறுகையில், ''தி.மு.க.,வுடன், கூட்டணியில் தான் இருக்கிறோம்,'' என்றார். இவ்வாறு, அழகிரி சமாளித்தாலும், காங்., உடனான கூட்டணி முறியலாம் என்பதை, நேற்று தி.மு.க., சூசகமாக தெரிவித்தது.

தி.மு.க., முதன்மை செயலர் டி.ஆர்.பாலு, சென்னை அறிவாலயத்தில் அளித்த பேட்டி: தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்., தலைவர் ராமசாமி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். இது குறித்து, தி.மு.க., தொண்டர்கள், ஸ்டாலினிடமும், என்னிடமும், தங்களது சங்கடத்தை தெரிவித்தனர். நம் கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறதா என, கேட்டனர். ஆகையால், தி.மு.க., குறித்த அறிக்கையை கே.எஸ்.அழகிரி தவிர்த்திருக்கலாம். அவர்கள் அறிக்கையின்படி, ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே, நாங்கள் அதை பார்க்கிறோம். அதன் அடிப்படையில், டில்லியில், காங்., நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க., - காங்., கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு, காலம் பதில் சொல்லும்.இவ்வாறு, டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 21ம் தேதி, சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கூட்டணி நிலைப்பாடு குறித்து, தி.மு.க., முக்கிய முடிவு எடுக்கும் என, கூறப்படுகிறது. இவ்வாறு, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., என, இரண்டு கூட்டணியிலும், கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிகள் கூட்டணி மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல், இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில், அரசியல் சதுரங்கம், நேற்று முதல் முதல் துவங்கியுள்ளது.


துணை சபாநாயகர் தி.மு..க.,வுக்கு பதவி?

லோக்சபா துணை சபாநாயகர் பதவி, ஏழு மாதங்களாக காலியாகவே உள்ளது. இந்த பதவியை ஏற்க, பா.ஜ., கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், கூட்டணியில் இல்லாத கட்சிகளும் தயாராக உள்ளன. தற்போது, தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் கழற்றி விடப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், லோக்சபா துணை சபாநாயகர் பதவியை, தி.மு.க.,வுக்கு ஒதுக்க, பா.ஜ., முன் வருமானால், அப்பதவியை ஏற்க, தி.மு.க.,வும் தயாராக உள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (38+ 64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
15-ஜன-202018:28:28 IST Report Abuse
Subramanian Arunachalam காங்கிரஸ் ஒரு நாளும் தி மு கவை விட்டு நீங்காது . தி மு கவும் காங்கிரெஸ்ஸை விட்டு நீங்காது . தேர்தலின் போது பெரிய தொகை காங்கிரஸிடம் இருந்து தி மு க பெற்று கொள்ளும் . இப்போது அழகிரி கொடுத்த அறிக்கையால் அந்த தொகை இன்னும் பெரிய தொகையாக இருக்கும்
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
16-ஜன-202015:09:43 IST Report Abuse
மூல பத்திரம் காங்கிரஸ் இல்லாமல், திமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் சிதறும். காங்கிரசுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன (தினகரன் , ரஜினி , பாமக அல்லது அதிமுக ) திமுகவிரற்கு வாய்ப்புகள் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-202016:50:14 IST Report Abuse
Endrum Indian இரட்டை இலை. இலையில் சாப்பிடும் வரை தான் இலைக்கு மதிப்பு . தாமரை மலர். பூஜையில் வைக்கும் மட்டுமே மதிப்பு
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
15-ஜன-202013:10:59 IST Report Abuse
raja திமுக வீழ்வது நாட்டிற்கு நல்லது. பாஜக விரைவில் அதை முடிக்க வேண்டும்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-ஜன-202018:09:05 IST Report Abuse
வல்வில் ஓரி டெபனட்லி ...டெபனட்லி...
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
15-ஜன-202020:19:52 IST Report Abuse
Srinivas//திமுக வீழ்வது நாட்டிற்கு நல்லது. பாஜக விரைவில் அதை முடிக்க வேண்டும்// சரி...சிலை திருடிகளை என்ன செய்யலாம்? அடுத்த தலைமுறைக்கு இறைவன் ஐம்பொன் சிலை என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு கோயில் சிலைகள் திருடப்பட்டுள்ளதே. சிலை திருட்டு, கோயில் வருமான பொய் கணக்கு, சொத்துக்கள் சூறையாடல் இதெல்லாம் போக கோயில் நிலத்தை இலவச பட்டா போட்டு கொடுக்க அரசாணை...கோயில் நிலம் இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? பட்டா போட்டு கொடுக்க? தமிழகத்தில் பல ஆண்டுகளாக எத்தனையோ கோயில்கள் சூறையாடப்பட்டு வருமானம் இல்லாமல் தினசரி பூஜை கூட இல்லாமல் இருண்டு கிடக்கிறது. அறநிலையத்துறையை கையில் வைத்துக்கொண்டு இரண்டு களவாணி கட்சிகளும் அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடிகள் இருக்கும். பொதுமக்களின் நன்கொடையால் பல நூறு கோயில்கள் அன்றாட பூஜைகளையும், ஆச்சார்யர்களின் சம்பளத்தையும் தவறாமல் செய்து சமாளித்துக்கொண்டுள்ளன. அடிமைகளை ஆதரித்து பிஜேப்புக்கு இருந்த நல்ல மதிப்பையும் கெடுத்துக்கொண்டனர். கொஞ்சம்கூட துவளாமல் பிஜேபி செய்த பல நல்ல செயல்களால் ஒரு உறுப்பினர் என்ற நிலையிலிருந்து இன்று தொடர்ச்சியாக நாட்டை ஆளும் நிலைக்கு பிஜேபி வந்துள்ளதே. அதுதான் தமிழகத்தில் வேண்டும். நல்லதை தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் மக்கள் நிச்சயம் ஆதரிப்பர். நல்லவை மெதுவாக வரும்...நிலைத்து நிற்கும் என்பது பிஜேபியின் விஷயத்தில் நடந்துகொண்டுள்ளது. நாடு இருந்த இக்கட்டான நேரத்தில் பிஜேபி இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததுதான் முக்கியமான விஷயம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி...அதை பிஜேபி நினைவில் கொண்டு ஊழல் கட்சிகளுடன் உள்ள உறவை தூக்கியெறியவேண்டும். அப்புறம் பாருங்கள்...மக்களின் ஆதரவை. மத்தியிலும் நல்ல ஆட்சி செய்து மீண்டும் ஊழல், லஞ்சம் இல்லாத அரசை பிஜேபி அமைக்கவேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பம். தமிழக பிஜேபி தலைவர்களே....மனம் தளராமல் மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருங்கள்....மக்கள் உங்களை திரும்பிப்பார்த்து நிச்சயம் ஆதரிப்பர்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X