பொது செய்தி

தமிழ்நாடு

மல்லர் கம்பத்தில் அசத்தும் தமிழக வீரர்கள்

Added : ஜன 15, 2020
Advertisement
 மல்லர் கம்பத்தில் அசத்தும் தமிழக வீரர்கள்

சென்னையில், சமீபத்தில் நடந்து முடிந்த மயிலாப்பூர் திருவிழாவில், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது, 'மல்லர் கம்பம்' எனும், தமிழர் வீரவிளையாட்டு தான்.

தொங்கும் கயிற்றில் பெண்கள் செய்த யோகா போன்ற சாகசங்களும், உயரமான கம்பத்தில் ஆண்கள் செய்த விளையாட்டும், பார்ப்பவர்களை ஆச்சர்யத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.மொபைல் போனில் பேசி, மொபைல் போனில் விளையாடி, மொபைல் போனிலேயே வாழும் இன்றைய தலைமுறையினர் இழந்து வருவது, நல்ல பொழுதுகளையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் மட்டுமல்ல, நல்ல உடற் கட்டையும் தான்.

நல்ல திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடிய குழந்தைகளை, சிறுவர்களை பார்ப்பதே அரிது என்றாகி விட்ட காலத்தில், இந்த மல்லர் கம்பத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும், சிறந்த உடற்கட்டும், வலுவும் கொண்டிருந்தனர். நிமிட நேரங்களில் கயிற்றில் ஏறுவதும், கம்புகளில் சாகசம் செய்வதுமாக, அவர்கள் பம்பரமாக மாறி மாறி, களைப்பின்றி மல்லர் கம்பத்தில் விளையாடி, பலரையும் மகிழ்வித்தனர்.

இது பற்றி, இதன் பயிற்சியாளர் பிரகாஷ் என்பவர் கூறியதாவது:பழங்காலத்தில், போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு, மல்லர் கம்பப்பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகத்தில், மல்யுத்த வீரர்கள் யாராக இருந்தாலும், மல்லர் கம்பம் பயிற்சிக்கு பிறகே, மல்யுத்தம் செய்வர்.காரணம், அப்படியொரு உறுதியான உடலையும், மனதையும், இந்தப் பயிற்சி கொடுக்கும். இது,

பயிற்சி என்ற நிலையில் இருந்து தற்போது, விளையாட்டு என்ற அந்தஸ்து பெற்று, இந்தியா முழுவதும் பரவியுள்ளது.இந்த விளையாட்டின் மீதான ஈடுபாட்டால் நான், விழுப்புரம், உலகதுரையிடம் கற்றுக் கொண்டேன். நான் கற்றதை, மற்றவர்களுக்கும் கற்றுத்தர எண்ணினேன். சென்னை, ஐ.சி.எப்.,பில், நான் காவலராக உள்ளேன்.

எனக்கு, அதிகாரிகள் தந்த ஆதரவால், இலவசமாக அனைவருக்கும் கற்றுத் தருகிறேன்.'தமிழக மல்லர் கம்பம்' என்ற இந்த அமைப்பில், ஆண் மற்றும் பெண்களுக்கு, மல்லர் கம்பம் பயிற்சி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு, என் மனைவியும், என்னுடன் பணிபுரிபவருமான பாமா பிரகாஷ், பயிற்சி தருகிறார்.

எங்கள் அணி இதுவரை, ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. ஆரோக்கியமான, அருமை யான உடலைப் பெற, எந்த வயதினரும், இந்த மல்லர் கம்பம் பயிற்சியில் ஈடுபடலாம். இவ்வாறு, அவர் கூறினார். பயிற்சியில் ஈடுபட விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய மொபைல்போன் எண்: 99424 48468.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X