பொது செய்தி

தமிழ்நாடு

'குறும்படம் தயாரிக்க வாசிப்பு அவசியம்!'

Added : ஜன 15, 2020
Advertisement
 'குறும்படம் தயாரிக்க வாசிப்பு அவசியம்!'

சென்னை:புத்தக கண்காட்சியில், புத்தக விற்பனை தவிர, குறும்படமும் திரையிடப்படுகிறது. 'குறும்படம் தயாரிக்க புத்தக வாசிப்பு அவசியம்' என, அதை தொகுத்து வழங்கிய திருநாவுக்கரசு கூறினார்.

இதுவரையிலுமாக, 'உதவாக்கரை, ஆசைகடிதல், டோல்கேட், சினம், கொற்றவை, காலம்பெரிது, தேசிய பறவை, டீன்ஏஜ், லிசன், கடன், சட்டப்படி வழிப்பறி, பிரேக் டவுன், சீற்றம் கொள், ஜெஸ்ட் எ ரேட், மீனா, வசந்தபாலசுந்தரம், திசையறியார், பேசாத பேச்செல்லாம், சார் டூ மினிஸ்' போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன.புத்தகம் வாங்க வரும் வாசகர்கள், குறும்படங்களையும் பார்த்தே செல்கின்றனர்.

தினமும், 100க்கும் மேற்பட்டோர் பார்க்கின்றனர். அதோடு, படம் குறித்த விமர்சன கலந்துரையாடலும் நடக்கிறது.குறும்படங்களை தொகுத்து வழங்கிய, 'நிழல்' திருநாவுக்கரசு கூறியதாவது:குறும்படம் இயக்குவோரில் பெரும் பாலானோர், புத்தகம் வாசிக்கும் பழக்கும் உடையவர்கள்.

இதனால், புத்தக கண்காட்சியில் குறும்படங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இலக்கியம், கல்வி, குடும்ப உறவு,சமூக விழிப்புணர்வு போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன.புத்தகம் வசித்தால், குறும்படம் எடுப்பது எளிது. குறும்படம் எடுக்க துடிக்கும் இளைஞர்களுக்கு, இத்திரையிடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வு நேரங்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வைத்துள்ளேன். திருக்குறள், வரலாறு, கதைகள் போன்ற புத்தகங்கள் வாங்கி உள்ளேன். மன அழுத்தத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு, அரிய மருந்து புத்தகங்கள் கிடைக்கின்றனஎஸ்.சந்திரன், 82, ஊட்டி நேரடியாக உணர முடியாத, சக மனிதர்களின் வாழ்வியலை, புத்தகம் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது, விவேகானந்தரை படித்தேன். அன்று முதல், அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். புராணம் சார்ந்த புத்தகங்களை, தேர்வு செய்து வாங்கினேன்.எம்.கலையரசன்காவல் ஆய்வாளர், குமரன் நகர்சென்னை, ஐ.ஐ.டி.,யில் படிக்கிறேன். எனக்கு, புத்தகம் மீது தீராத காதல் உண்டு. பல வகையான புத்தகங்கள் இருப்பதால், எதை தேர்வு செய்வது என்ற குழப்பமும் ஏற்படும்.

முறையான திட்டமிடலுடன் வந்தால், புத்தகம் தேர்வு செய்வது எளிது.

ஆர்.கார்த்திக், 25, திருவாரூர்

முதல் முறையாக புத்தக கண்காட்சிக்கு, பெற்றோருடன் வந்துள்ளேன். விலங்குகள், பறவைகள் குறித்த கதை புத்தகங்கள் வாங்கினேன். கீழடி அகழாய்வு கண்காட்சி அழகாக இருக்கிறது.

டி.விதுலா, 8,மாம்பலம்

புத்தகம் வாங்கிய கவர்னர்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை, புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்தார். 10க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டு, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கினார். அவர் கூறியதாவது: புத்தகத்தை, திருவிழாவாக கொண்டாடுவது மிகழ்ச்சி அளிக்கிறது. புத்தகங்கள் வாழ்வியலை புதுப்பிக்கும். நான், தினமும், ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்கிறேன். பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு, பிரபல எழுத்தாளர்கள் குறித்த புத்தகங்கள், அப்பாவுக்கு பரிசு கொடுக்க, காந்தி குறித்த புத்தகம் வாங்கினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X