தமிழ்நாடு

களைகட்டியது கோயம்பேடு மார்க்கெட்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
#களைகட்டியது#கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு:பொங்கல் பொருட்கள் வாங்க, சிறப்பு சந்தையில் திரண்ட மக்களால், கோயம்பேடு களைகட்டியது.

கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில், அங்காடி நிர்வாக குழு சார்பில், பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை, சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது.இங்கு, அனைத்து வகையான பூஜை பொருட்களும், ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

பொங்கல் விழாவிற்கு தேவையான பொருட்கள் வாங்க, மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் நேற்று குவிந்தனர். இதனால், கோயம்பேடு சந்தை நேற்று களைகட்டியது.இந்த சிறப்புச் சந்தையில், 15 கரும்புகள் உடைய கட்டு, 150 முதல், 200 ரூபாய்க்கும், 10 செடிகள் கொண்ட மஞ்சள் கொத்து, 50 ரூபாய்க்கும், பூசணிக்காய், 1 கிலோ, 25 ரூபாய்க்கும், எலுமிச்சை பழம், 1 கிலோ, 20 ரூபாய்க்கும் விற்பனையாகின.

தேங்காய், 15 முதல், 20 ரூபாய்க்கும், மாவிலை, பூலாம் பூ கொண்ட கொத்து, 10 ரூபாய்க்கும், தோரணங்கள் கொத்து, 10 ரூபாய்க்கும் விற்பனையாகின.மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மல்லி விலை 'கிடுகிடு'

கோயம்பேடு பூ மார்க்கெட்டில், சேலம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்கள், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும், பூக்கள் வரத்து உள்ளது. பொங்கல் பண்டிகையை அடுத்து, நேற்று அனைத்து வகை பூக்கள் விலையும், சற்று உயர்ந்து காணப்பட்டது. இதில், சீசன் இல்லாத காரணத்தால், மல்லி பூ வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, 1 கிலோ மல்லி பூ, 2,500 ரூபாய்க்கு விற்பனையானது. இதைபோல், 1 கிலோ முல்லை பூ, 1,800 ரூபாய்க்கும், ஜாதி, 800 -- 900, சாமந்தி, 80 -- 100, சம்பங்கி, 120 ரூபாய்க்கும்விற்பனையாகின.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X