அவனியாபுரத்தில் நீதிபதி ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவனியாபுரத்தில் நீதிபதி ஆய்வு

Added : ஜன 15, 2020
Share
அவனியாபுரம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 15) நடக்கிறது. இதற்காக திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் வாடிவாசல், மேடை, இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள்,

அவனியாபுரம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 15) நடக்கிறது. இதற்காக திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் சாலையில் வாடிவாசல், மேடை, இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள், வாடிவாசல் பகுதிகளை பார்வையிட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் கூறும்போது, அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அனைவரும் இணைந்து சிறு தவறுகூட ஏற்படாமல் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும், என்றார்.அமைச்சர் உதயகுமார்: ஜல்லிக்கட்டை தமிழக அரசு மிக சிறப்பாக நடத்தி வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த தின விழா நடக்க இருப்பதால் முதல்வர், இணை முதல்வர் வர இயலாத நிலை உள்ளது. அலங்காநல்லுாரில் சிறந்த வீரர் மற்றும் காளைக்கு சென்னையில் வைத்து கார் வழங்க உள்ளனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X