பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
பள்ளி கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

மதுரை : மதுரையில் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில் 25ம் ஆண்டு பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களுக்கும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.

மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் விழா நடந்தது. பதிவாளர் (பொறுப்பு) சங்கர் நடேசன், சிண்டிகேட் உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், லில்லிஸ் திவாகர், பாரி பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக சீனாவின் ஸியாங்கன் பல்கலை பேராசிரியர்கள் ஸான்ங் யுவே, நீலகண்டன் பங்கேற்றனர். பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

* அ.வல்லாளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. பேச்சாளர் சண்முகவேல் பேசினார். உதவி தலைமை ஆசிரியர் வாசிமலை முன்னிலை வகித்தார். மாநில போட்டியில் பங்கேற்ற கபடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சுரேஷ், மனோகரன், சாந்தி, உசேன் ஏற்பாடு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

*கோ.புதுார் அல் அமீன் மேல்நிலை பள்ளியில் தைப் பொங்கல் விழா தாளாளர் முகமது இதிரிஸ் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் பொங்கலிட்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹ்மத்துல்லா பங்கேற்றனர். ஆசிரியர்கள் தமிழ்குமரன், நுாருல்லா, சண்முகசுந்தரம் ஏற்பாடு செய்தனர்.

* கொண்டபெத்தான் நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் பீட்டர் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஈஸ்வரி வரவேற்றார். சர்க்கரை பொங்கலிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் ராமலட்சுமி, விஜயலட்சுமி, உமா மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

*சங்கரலிங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. ஆசிரியைகள், பெற்றோர் பங்கேற்றனர்.

* உசிலம்பட்டி சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமை ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. திம்மநத்தம் ஊராட்சி தலைவர் கோஸ்மின் தோப்புசாமி பேசினார். மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

* மதுரை தெற்கு வாசல் மாநகராட்சி மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை சாலா தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாணவியர் பங்கேற்ற பரதநாட்டியம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

* பீ.பீ.குளம் தென் மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தில் இயக்குனர் மோகன்தாஸ் தலைமையில் விழா நடந்தது. தல்லாகுளம் தபால் கோட்ட அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளர் ஜவஹர்ராஜ், தல்லாகுளம், வடக்கு வெளி வீதி, அரசரடி தலைமை தபால் நிலையங்களில் முதுநிலை போஸ்ட் மாஸ்டர் அழகர்சாமி, நாகநாதன், செந்தில்ராஜன் தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது.

* அழகர்கோவிலில் பா.ஜ., புறநகர் மாவட்டம் சார்பில் தாமரை பொங்கல் விழா மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கோட்ட இளைஞரணி பொறுப்பாளர் சங்கர்பாண்டி, முன்னாள் மண்டல் தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், சோலைமணிகண்டன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

* டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தினர். செயல்அலுவலர் சின்னச்சாமிபாண்டியன், அலுவலர்கள் பங்கேற்றனர். பேரையூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X