பொது செய்தி

தமிழ்நாடு

காணும் பொங்கலன்று கால் நனைக்க தடை!

Added : ஜன 15, 2020
Advertisement

பெசன்ட்நகர்:காணும் பொங்கல் அன்று, மக்கள் அதிகம் கூடும் இடமான, மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.குறிப்பாக, நாளை மறுநாள், காணும் பொங்கல் அன்று, மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை போன்ற கடற்கரையில் அதிகமாக மக்கள் கூடுவர். இதனால், பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், மெரினா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை, பனையூர், அக்கரை கடற்கரை பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு, உயர் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கல் அன்று, கடற்கரையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்காக்களில் நெரிசல் இல்லாமல் சுற்றி பார்க்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.


480 சிறப்பு பஸ்கள்



காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாளை மறுநாள், 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவை, அண்ணா சதுக்கம், வண்டலுார் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி., கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். அதேபோல், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு படகுகுழாம், கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X