தமிழ்நாடு

மூச்சுக்குழாயை அகற்றி தொழிலாளி மீட்பு

Added : ஜன 15, 2020
Advertisement

மதுரை, மதுரை அரசு மருத்துவமனையில் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளியின் மூச்சுக்குழாயை அகற்றி டாக்டர்கள் அவரை மீட்டனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கூலித்தொழிலாளி கேசவன் 35. பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால் சுவாசப் பிரச்னை ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தாக அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதமாக செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளித்ததில் மீண்டார். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் பெற்றதால் மூச்சுக்குழாயில் புண் ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்பட்டார். 3டி ஸ்கேன் எடுத்ததில் 3 செ.மீ., நீளத்தில் மூச்சுக்குழாய் சுருங்கி பயன்படாத நிலையில் இருந்தது.மயக்கவியல், இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர்கள் இணைந்து பயன்படாத 3 செ.மீ., நீள மூச்சுக்குழாயை அகற்றி, எஞ்சிய பகுதியை இணைத்தனர். தற்போது கேசவன் நல்ல நிலையில் உள்ளார். ரூ.2 லட்சம் மதிப்பிலான இச்சிகிச்சை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X