பொது செய்தி

தமிழ்நாடு

மாங்காடு வாலிபர் வெட்டி கொலை

Added : ஜன 15, 2020
Advertisement

மாங்காடு:மாங்காடில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

மாங்காடை அடுத்த கோவூர், அனுகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 28; பெயின்டர் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், நேற்று காலை வரை திரும்பவில்லை. அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஈஸ்வரன் நகரில், யுவராஜ், சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. போலீசார் விரைந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த கத்தியை கைப்பற்றினர்.விசாரணையில், யுவராஜுக்கு திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால், மாமனார் வீட்டிற்கும், யுவராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கொலை செய்யப்பட்ட இடத்தில், ஏகப்பட்ட காலி மதுபாட்டில்கள் கிடந்தன.இதனால், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X