தமிழ்நாடு

விளையாட்டுகளில் மாணவர்கள் வெற்றியை தேடி தர வேண்டும் அமைச்சர் உதயகுமார் அழைப்பு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement
விளையாட்டுகளில் மாணவர்கள் வெற்றியை தேடி தர வேண்டும் அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம்:''சர்வதேச விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் தமிழகத்திற்கு வெற்றியை தேடி தர வேண்டும்,'' என, திருமங்கலம் தொகுதி அம்மாபட்டியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் உதயகுமார் பேசினார்.

கலெக்டர் வினய் தலைமை வகித்தார். பேட்மிட்டன், கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை துவக்கி வைத்து அமைச்சர் விளையாடினார். அவர் பேசியதாவது: கிராமப்புற இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தவும், விளையாட்டு திறனை ஊக்குவிக்கவும் தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். திட்டத்தை செயல்படுத்த ரூ. 76 கோடியே 23 லட்சத்து 9,300 ஐ ஒதுக்கப்பட்டது. 13,052 கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இரு பாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் கபடி,வாலிபால்,கிரிக்கெட் மற்றும் பூப்பந்து விளையாட்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது. விளையாடும் போது மனம் மகிழ்ச்சியடையும். உள்ளம் துாய்மையாகும். மாணவர்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தமிழகத்திற்கு வெற்றியை தேடி தர வேண்டும், என்றார். அதிகாரிகள், அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar - Chennai,இந்தியா
15-ஜன-202007:04:23 IST Report Abuse
sekar Dear Honorable Minister, We need to establish more training play ground, but in Tamil Nadu it is very hard to see good practice play ground in neither city nor villages. At least we need one big play ground to play (Tennis/Soccer/Cricket/Volleyball/Basketball) for every 100 homes, so that our kids can play and enjoy their childhood life.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X