சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திக்ள்

Added : ஜன 15, 2020
Advertisement

விதிகளை மீறி கடை நடத்தியவர் கைதுமதுரை: வடக்கு மாசி வீதி ரிஷிபுல்சிங் 58. இவர் கூடலழகர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் முன் அனுமதியின்றி கடை நடத்தினார். மேலவடம்போக்கி தெருவில் நெரிசல் ஏற்பட்டது. இவரை திடீர்நகர் போலீஸ் எஸ்.ஐ., பணராஜ் கைது செய்தார்.சிலிண்டர்கள் பறிமுதல்; 5 பேர் கைதுமதுரை: சொக்கலிங்கநகர் 6வது தெரு முகமது ஈசாக் 24, ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு மாணிக்கம் 45, ஆரப்பாளையம் மறவர் முதல் தெரு ஜெயராஜ் 33, சையது அலி 50, அவனியாபுரம் கிருஷ்ணமூர்த்தி 56, ஆகியோர் பொது இடங்களில் ஆபத்தான முறையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரித்தனர். அவர்களை எஸ்.எஸ்., காலனி, கரிமேடு போலீசார் கைது செய்தனர். சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பஸ்சில் நகை திருட்டுமதுரை: கரும்பாலை மலையரசி 25. சென்னை தனியார் வங்கியில் வேலை செய்கிறார். பொங்கலுக்காக மூன்று வயது மகள் தேஜாவுடன் சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்சில் வந்தார். அருகில் 27 வயது மதிக்கத்தக்க பெண் பயணித்தார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அப்பெண் இறங்கினார். மலையரசி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது இரண்டு பவுன், ரூ.ஆயிரம் வைத்திருந்த பை திருடப்பட்டிருந்தது. மலையரசி புகார்படி நகையுடன் மாயமான மர்ம பெண்ணை அண்ணாநகர் போலீசார் தேடுகின்றனர்.கஞ்சா; இருவர் கைதுமதுரை: செல்லுார் கீழத்தோப்பு தங்கப்பாண்டி மனைவி மகாலட்சுமி, பசும்பொன் மனைவி சித்ரா 45, ஆகியோர் கஞ்சா விற்றனர். இருவரையும் செல்லுார் போலீஸ் எஸ்.ஐ., தியாகபிரியன்கைது செய்தார். 2.200 கிலோ கஞ்சா, அலைபேசி, ரூ.2,500 கைப்பற்றப்பட்டது.விபச்சாரம்: மூவர் கைதுமதுரை: கேரள மாநிலம் அஞ்சுகளிபரம்பில் அருகே மாலபுரம் ராஜேஷ். இவர் ஆத்திகுளம் பஸ் ஸ்டாப் ஜே.கே.டவர்ஸ் 2வது தளத்தில் 'அபிரு வெல்னெஸ் ஸ்பா' என்ற பெயரில் பியூட்டி பார்லர் நடத்தினார். இதில் விபச்சாரம் நடந்தது. தல்லாகுளம் ஏட்டு ராஜ்குமார் புகார்படி, ராஜேஷ், பிஜேஷ் 34, கொடைக்கானல் அனந்தகிரி பாலா மனைவி யோகலட்சுமி 31, மும்பையை சேர்ந்த டோலி மில்ட்டன் முல்லா 28, ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜேஷ் தவிர மற்றவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.கர்ப்பிணி பலி மதுரை : நெல்பேட்டை உஹ்மான் அலி மகள் மரிய ஆயிஷா,22, திருமணமாகி மகள் உள்ளார். கர்ப்பிணியான இவர், தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை குளியல் அறையில் வழுக்கி விழுந்து மயக்கமடைந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் இறந்ததாக டாக்டர் தெரிவித்தார். விளக்குத்துாண் போலீசார் விசாரிக்கின்றனர்.கார் மோதி பெண் பலிபேரையூர்: பேரையூர் அருகே எம்.சுப்புலாபுரம் புண்ணியம்மாள் 58. இவர் நேற்று காலை தோட்ட வேலைக்கு சென்ற போது, கோவையிலிருந்து ராஜபாளையம் சென்ற கார் மோதி பலியானார். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து கோவை கார் டிரைவர் கண்ணனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X