பொது செய்தி

தமிழ்நாடு

வராண்டா முனி... வந்துட்டான் முனி... மிரட்டும் பூண்டி முரட்டுகாளை...

Added : ஜன 15, 2020
Advertisement

மதுரை, 'வராண்டா முனி வந்துட்டான் முனி'... என ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை தெறிக்கவிட கொம்பு வைச்ச சிங்கமாய் காத்திருக்கிறது மதுரை அழகர்கோயில் ரோடு பூண்டியை சேர்ந்த முரட்டுகாளை முனி.பார்க்க பச்சை சாதுவாக இருக்கும் இது கடந்த ஆண்டு அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான விருது பெற்றது. காளையை வளர்க்கும் முனிசாமி கூறியதாவது: மதுரை விளாத்துாரில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன் இந்த காளையை வாங்கினோம். அன்று முதல் இன்று வரை குடும்பத்தில் ஒருவராக பாசத்துடன் பழகி வருகிறது. ஏழு வயதாகும் முனிக்கு பச்சை புல் இருந்தால் போதும் விருந்து சாப்பிடுவது போல் விரும்பி சாப்பிடும். கூடுதலாக பச்சரிசி உள்ளிட்ட சில உணவுகளை வழங்குகிறோம்.முனி, ஏற்கனவே பல பயிற்சிகள் பெற்றதால் ஜல்லிகட்டுக்காக கூடுதல் பயிற்சி எதுவும் தேவையில்லை. மண் குத்தினால் தான் களத்தில் நின்று விளையாடும் என்று நினைப்பது தவறி. பொதுவாக காளைகள் மணலை பார்த்தால் இயற்கையாகவே கொம்புகளால் குத்தி விளையாடும். ஆறு, குளம், கண்மாய்களில் இறக்கி விட்டால் நீந்தும்.முனிக்கு எந்த தொல்லையும் வழங்காமல் அதன் போக்கிலேயே விட்டு வளர்க்கிறோம். இதனால் எங்கள் குடும்பம் தவிர வெளி நபர்களை பார்த்தால் கூட சீறாமல் அமைதியாக நிற்கும். காளைக்கும் மனிதர்கள் போல் மனம் உண்டு என புரிந்து பக்குவமாக வளர்க்க வேண்டும். 2018 ல் சிறந்த காளைக்கான விருது பெற்ற முனி பாலமேடு, சக்குடி, குலமங்கலம், அய்யம்பட்டி, அய்யம்பாளையம், கட்டிகுளம் ஜல்லிக்கட்டில் வெற்றி வாகை சூடி பெயர் பெற்றுத் தந்துள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X