பொது செய்தி

தமிழ்நாடு

'குட்டீஸ்' குதுாகலிக்கும் சுற்றுலா பொருட்காட்சி

Added : ஜன 15, 2020
Advertisement
 'குட்டீஸ்' குதுாகலிக்கும் சுற்றுலா பொருட்காட்சி

சென்னை, தீவுத்திடலில் நடந்து வரும், 46வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி பெண்களையும், குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

சிறு, குறு தொழில் வர்க்கத்தினரின் உற்பத்தியை சந்தைப்படுத்தவும், அரசின் செயல்பாடுகளை மக்கள் அறியவும், ஆண்டுதோறும் சென்னை, தீவுத்திடலில் இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு, 46வது பொருட்காட்சி நடந்து வருகிறது. இதில், அறநிலையத்துறை அரங்கத்தில், அத்தி வரதர் சேவை தரிசனம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், சிற்பங்களை கண்முன்னே கொண்டு வந்துள்ளது. சுகாதாரத் துறையின் அரங்கில் ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.காவல் துறை அரங்கில் மோப்ப நாய்களின் சாகசங்கள், காவல் துறையின் சட்ட திட்டங்கள், சாலை விதிமுறைகள், துப்பாக்கி வகைகள் அதன் செயல்பாடுகள் விளக்கப்படுகின்றன.

அதேபோல, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை அங்கு அறிந்துக் கொள்ளலாம்.சிறார்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை, கண்டுகளிக்கும் வகையில் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள், அண்ணா கலையரங்கில் நடத்தப்படுகின்றன.தமிழர்களின் கலாசாரத்தை பிரதி பலிக்கும் வகையில் மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை, சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

பொருட்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில், 1.2 லட்சம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கும் வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.இது மட்டுமல்லாமல், சாகச விளையாட்டு சாதனங்கள், சிறார் விளையாட்டு சாதனங்கள், 10 அதிநவீன ராட்டினங்கள், குழந்தைகளை குஷிப்படுத்தி வருகின்றன.மேலும், வண்ண மீன்கள் காட்சியகம், கண்ணாடி மாளிகை, பெண்கள், குழந்தைகளுக்கான புதிய ஆடை, அணிகலன்கள், ஏராளமான விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பல மாநில ஊறுகாய் வகைகள், கைப்பைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், பார்வையாளர்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.இவற்றுடன் வழக்கமான டில்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி வகைகள், வடமாநில உணவு வகைகள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X