சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடுங்கையூரில் கோஷ்டி மோதல்

Added : ஜன 15, 2020
Advertisement

கொடுங்கையூர்:கொடுங்கையூரில், இரு தரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில், ஒருவருக்கு கத்துக்குத்து விழுந்தது.

கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், மில்க் காலனியைச் சேர்ந்தவர்கள் முனுசாமி, 48; முருகவேல், 38. இவர்களுக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார், அணைச்சேரி கிராமம். சமீபத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில், அணைச்சேரி கிராமம் சார்பில், முனுசாமி, முருகவேல் இருவரும் போட்டியிட்டனர்.இதில், முருகவேல் வெற்றி பெற்றார்.

இதை கொண்டாடும் வகையில், முருகவேல் கோஷ்டியினர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை முழுதும் போஸ்டர் ஒட்டினர்.இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி கோஷ்டியினர், போஸ்டர்களை கிழித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் உருட்டு கட்டை, கத்தியால் தாக்கி கொண்டனர்.

இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த செல்லத்துரை, 38, என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X