கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும்

Added : ஜன 15, 2020

புதுடில்லி : 'சமூக ஊடகங்களில், மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை, மரியாதையு டன் எதிர்கொள்ள வேண்டும்' என, கடற்படைத் தலைவர் கரம்பீர் சிங் கூறினார்.புதுடில்லியில் நடைபெற்ற, நான்காவது ஆயுதப்படை வீரர் தின விழாவில், கடற்படைத் தலைவர் கரம்பீர் சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:மக்களுக்கும், படை வீரர்களுக்கும் இடையிலான பிணைப்பு என்பது நிரந்தரமானது. அவர்களுக்கு நாம், தயங்காமல் சேவை செய்ய வேண்டும். வீரர்களுக்கு இருக்கும் மரியாதையை, சேவைகள் மூலம் உயர்த்திக்கொள்ள வேண்டும். இது, தகவல்கள் நிறைந்த காலமாக உள்ளது. சமூக ஊடகங்களில், நம் சேவைகளைப் பற்றிய, தவறான கருத்துகளை மற்றவர்கள் பதிவிட்டால், அவற்றை மரியாதையுடன் எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X