சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஊட்டச்சத்து உணவை பெண் அறிந்தால் குடும்பம் ஆரோக்கியமாக வாழ முடியும்'

Added : ஜன 15, 2020
Advertisement

சென்னை:பிரசவித்த பெண்கள், முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.

சென்னையில், நு - சக்தி அமைப்பு, ராயல் டி.எம்.எஸ்., நிறுவனம் இணைந்து, பிரசவித்த பெண்கள், முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து உட்கொள்வது குறித்த, செய்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.இதில், கல்வியாளரும், சமூக ஆர்வலரும், சமையல் கலை வல்லுனருமான சுரேஷ் சின்னசாமி, நிகழ்ச்சியில் பங்கேற்று பிரசவித்த பெண்களுக்கு, ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தயாரிப்பது குறித்து விளக்கினார்.

அப்பல்லோ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி சங்கர் பேசிய தாவது:இந்திய உணவுகளில்,சக்கைகள் அதிகம் நிறைந்துள்ளன.அவை தேவையான கலோரிகளை வழங்கினாலும், வைட்டமின் மற்றும் தாது பற்றாக்குறை உள்ளது.பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தெரிந்து, அவற்றை தயாரிப்பதன் வாயிலாக, அக்குடும்பம் ஆரோக்கியமாக வாழ முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

டி.எஸ்.எம்., நிறுவனத்தின் இந்திய வணிக இயக்குனர் அலோக் கோஹ்லி பேசுகையில், ''வீட்டில் தயாரிக்கும் உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தயார் செய்யலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X