பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கேரளா வழக்கு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாட்டின் முதல் மாநிலமாக, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.'இந்த சட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என, காங்., மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் கூறி வருகின்றன. 'இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ள கேரளாவின், சட்டசபையில் கடந்த மாதம்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என அறிவிக்கக் கோரி, வழக்கு தொடர்ந்துள்ள முதல் மாநிலம் கேரளா.இறுதிவரை எதிர்ப்போம்கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் கூறியதாவது:இந்த சட்டம் நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை சேதப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த சட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். இறுதி வரை, அனைத்து வகையிலும் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X