சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜன 15, 2020
Advertisement

இரும்பு திருடிய மூவருக்கு, 'கம்பி!

'பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை, எஸ்டேட் வளாகத்தைச் சேர்ந்தவர், ரவிகுமார், 37. அதே பகுதியில், இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். 10ம் தேதி, அவரது தொழிற்சாலையில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு தகடுகள் திருடு போயின. பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர். இதில், கானத்துார், ராஜிவ்காந்தி தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 28, முருகன், 21, ஹரி, 19, என்பது தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கத்திக்குத்தில் ஈடுபட்டவர் சிக்கினார்

எம்.கே.பி.நகர்: எம்.கே.பி.நகரில், 1ம் தேதி, முன்விரோதம் காரணமாக, மீஞ்சூரைச் சேர்ந்த செபாஸ்டின், 65, என்பவரை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து, பன்னீர்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.

விதிமீறிய ரவுடிக்கு 79 நாள் சிறை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், அண்ணா காலனியைச் சேர்ந்தவர், ராம்குமார், 23; ரவுடி. இவர், 'குற்றச்செயல்களில் இனி ஈடுபட மாட்டேன்' என, 286 நாட்களுக்கு முன், நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். ஆனால், திருவொற்றியூரைச் சேர்ந்த ஷகிலா, 23, என்பவரை தாக்கி, நகை பறிக்க முயன்றதாக, 4-ம் தேதி, போலீசார் இவரை கைது செய்தனர். நன்னடத்தை பத்திரத்தை மீறியதை தொடர்ந்து, ராம்குமாரை மீதமுள்ள, 79 நாள்கள் சிறையில் அடைக்கும்படி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.

போதை ஆசாமி அகப்பட்டார்

கே.கே.நகர்: கே.கே.நகர், ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், நேற்று இரவு போதை ஆசாமி ஒருவர், கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டதுடன், கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். தகவல் அறிந்து வந்த கே.கே.நகர் போலீசார், போதை ஆசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், குன்றத்துாரை சேர்ந்த கார்த்திகேயன், 21, என தெரிய வந்தது. கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர், மதுபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது திருட்டு, மொபைல் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரூ.62 லட்சம் மோசடி?

அம்பத்துார்: பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ்குமார், 39. இவர், அம்பத்துார் தொழிற்பேட்டையில், இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும், நிறுவனம் நடத்தி வருகிறார். பிரகாஷ் குமாரிடம், ஈரோடைச் சேர்ந்த, அவரது உறவினர் பார்த்திபன், தொழில் துவங்குவதற்கு, கடனாக, பண உதவி கேட்டார்.அவரும், 2012 - 2016ம் ஆண்டு வரை, 62 லட்சம் ரூபாயை, பார்த்திபனுக்கு கொடுத்தார். ஆனால், அவர், தொழில் ஏதும் துவங்கவில்லை.

இதையறிந்த, பிரகாஷ்குமார், பணத்தை திரும்ப கேட்டார். பார்த்திபன், பணத்தை கொடுக்க மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயம்

சூளைமேடு: சூளைமேடு பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர், சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

மின் கசிவால் தீ பிடித்த மொபைல் டவர்

கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 10 அடுக்குமாடி உடைய, தனியார் கட்டடத்தில் மேல் அமைக்கப்பட்டிருந்த, மொபைல் போன் டவர், நேற்று மதியம் தீ பற்றி எரிந்தது. கீழ்ப்பாக்கம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.தீ விபத்தில் காயமடைந்த காவலாளி ராஜமாணிக்கம் என்பவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X