'பாமாயில் புறக்கணிப்பு கவலை அளிக்கிறது'

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (4)
Advertisement

கோலாலம்பூர் : '' மலேசிய பாமாயிலை இந்தியா புறக்கணிப்பது கவலை அளித்தாலும், தவறுகளை சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்,'' என, மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, மகாதிர், இந்தியா, சவூதி அரேபியா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு, சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.காஷ்மீரில், 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட போது, 'காஷ்மீர் மீது இந்தியா போர் தொடுத்துள்ளது' என்றார். அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும்போது 'இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறது' என்றார்.அவர் பேச்சுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மலேசியாவில் இருந்து, பாமாயில் இறக்குமதி செய்வதை குறைக்குமாறு, வர்த்தகர்களுக்கு அதிகாரபூர்வமற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியா, மலேசியாவில் இருந்து, ஆண்டுக்கு, 44 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது.இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்ததால், இந்தாண்டு, மலேசியாவின் பாமாயில் இறக்குமதி, 10 லட்சம் டன் அளவிற்கே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, மகாதிர் முகமது கூறியதாவது:மலேசியாவின் பாமாயில் இறக்குமதியை இந்தியா புறக்கணித்திருப்பது கவலை அளிக்கிறது. அதேசமயம், தவறு நடந்தால் அதை நான் சுட்டிக் காட்ட தயங்க மாட்டேன்.

பணத்திற்காக, தவறை கண்டுகொள்ளாமல் இருந்தால், அது, ஏராளமான தவறுகள் புரிய வழிவகுத்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதனிடையே, இந்தியாவின் பாமாயில் இறக்குமதி குறைந்ததால், கவலை அடைந்துள்ள மலேசிய வர்த்தகர்கள், இரு தரப்பு பேச்சுக்கு ஏற்பாடு செய்யுமாறு, அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
15-ஜன-202013:39:16 IST Report Abuse
Asagh busagh நீரிழிவு மற்றும் டயபீடிக் நோய்கள் குறைய வாய்ப்புண்டு. பெருசு வாய்க்கிழிய நமக்கு அட்வைஸ் பண்ணுறத விட்டுட்டு அவுங்க நாட்டில மைனாரிட்டிகளை ஓடிக்கிவைப்பதை தடுப்பதை பற்றி முட்டத்தை பார்த்து யோசிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Murugan S -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-202010:32:50 IST Report Abuse
Murugan S Why not take similar stand against Chaina while they hurt our interest in so many issue?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-ஜன-202007:07:27 IST Report Abuse
Siva பாமாயில் முற்றிலும் தடை செய்ய படுவது இந்திய மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்லது... அரசு மருத்துவமனையில் கூட்டம் குறையும்... குறைந்த விலை என்பதால் பாமாயில் பயன்படுத்தி ஆரோக்கியம் இழந்து கொண்டு இருக்கிறோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X