தமிழ்நாடு

துருபிடித்து பாழாகும் தளவாடப் பொருட்களுக்கு விமோசனம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
துருபிடித்து பாழாகும் தளவாடப் பொருட்களுக்கு  விமோசனம்: உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

கடலுார்:தேர்தல் முடிந்து மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளதால், மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகங்களில் பாழாகி வரும் இரும்பு கம்பிகள், கதவு, ஜன்னல்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களுக்கு விமோசனம் பிறக்க உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி பதவிகள் காலியாக இருந்ததால், தனி அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. இருப்பினும் நகர, பேரூர் மற்றும் கிராமங்களில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகள் தன்னிறைவு பெறவில்லை. மேலும், மத்திய, மாநில அரசுகள் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளை மேம்படுத்தும் விதமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. அதுபோல், புயல், வெள்ளம் ஆகியவற்றால் பாதித்த பகுதிகளை குடிசை வீடுகள் இல்லா மாவட்டமாக மாற்றவும், மத்திய மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்கள் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால், மணல் தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை காரணமாக இப்பணிகளில் முன்னேற்றமில்லை.இதனால் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இரும்புக் கம்பிகள், கதவுகள், ஜன்னல் மற்றும் இலவச கழிவறை திட்டத்திற்கு தேவையான தகர மேற்கூரை போன்றவை அந்தந்த ஒன்றிய அலுவலக வளாகங்களில் திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன. அவை, மழை, வெயில் காலங்களில் சீரழிந்து, துருபிடித்து பாழாவதால் பயனாளிகளுக்கு வழங்கும் போது, தரமின்றி கிடைக்கிறது.
இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்து, பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். இதனால், கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டப் பொருட்களும், அந்தந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டு விடும் என்பதால், ஒன்றிய அலுவலகங்களில் குவிந்து கிடக்கும் தளவாடப் பொருட்களுக்கு விரைவில் விமோசனம் பிறக்கும் என பயனாளிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து முன்னாள் உள்ளாட்சி மாஜி பிரதிநிதி ஒருவர் கூறுகையில், 'ஒன்றிய நிதி கிடைக்காவிட்டாலும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் பூர்த்தி செய்து வந்தனர். அதுபோல், பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு, தாய் திட்டம் போன்றவற்றில் வீடுகள், கழிவறை ஆகிய திட்டப் பணிகள் முனைப்புடன் செய்யப்பட்டன.அதிகாரிகள் நேரடி கண்காணிப்பில் இருந்தபோது, மணல் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் இப்பணிகள் முடங்கின. புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதிநிதிகள், கிராம வளர்ச்சிப் பணிகளில் அதிக அக்கறை காட்டுவர் என்பதால், முடங்கி கிடக்கும் தளவாடப் பொருட்களுக்கு விரைவில் விமோட்சனம் கிடைக்கும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X