பெண்களை மிரட்டிய விமானி: அமைச்சர் விளக்கம்

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி : சென்னையில் இருந்து பெங்களூருக்கு, தனியார் விமானத்தில் சென்ற பெண்களை, சிறையில் அடைத்து விடுவேன் என, விமானி மிரட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

விமானியிடம் விசாரணை நடந்து வருகிறது.சென்னையில் இருந்து பெங்களூருக்கு, சுப்ரியா உன்னி நாயர், தன், ௭௫ வயது தாயாருடன், இண்டிகோ தனியார் விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில், நீரிழிவு நோயாளியான தன் தாயாரை அழைத்து செல்ல, சக்கர நாற்காலி கேட்டுள்ளார்.அப்போது, இண்டிகோ விமானி, தன்னை மிரட்டியதாக, சுப்ரியா உன்னி நாயர், 'டுவிட்டரி'ல் பதிவிட்டுள்ளார். அதில், ''சக்கர நாற்காலி கேட்டதற்காக விமானி கடுமையாக பேசினார். விமான நிலையத்தில் இருந்து வந்த, சக்கர நாற்காலியையும் தடுத்தார்.

எங்களை, ஓர் இரவு முழுவதும், சிறையில் அடைத்து வைக்க முடியும் என்றும் அச்சுறுத்தினார்,'' என, அவர் பதிவிட்டுள்ளார்.விமானத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி வெளியிட்டுள்ள, டுவிட்டில், ''இந்த பிரச்னை குறித்து, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும்படி கூறியுள்ளேன். இண்டிகோ அலுவலகம் தரப்பில், விமானியிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது," என, பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X