'ஹால்மார்க்' நகை விற்பனை கட்டாயம் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி : ''தங்க நகை விற்பனையாளர்கள், அடுத்தாண்டு ஜனவரி, 15 முதல், 'ஹால்மார்க்' முத்திரையுடன் கூடிய நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்,'' என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான், டில்லியில் நேற்று கூறியதாவது:தங்கத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக, தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை என்ற தரச் சான்று வழங்கப்படுகிறது. தேசிய தர மதிப்பு நிறுவனம், இந்த முத்திரையை வழங்குகிறது. இந்நிலையில், நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன்படி, அடுத்தாண்டு ஜனவரி, 15 முதல், நகை விற்பனையாளர்கள், ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய, 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நகை விற்பனையாளர்கள், இந்திய தர நிர்ணய அமைப்பில் தங்களை முறைப்படி பதிவு செய்வதற்காகவும், ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய நகைகளை விற்பதை கட்டாயாமக்குவதற்கும், ஒரு ஆண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான முறையான அறிவிக்கை, வரும், 16ல், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும். வெங்காயம் விலைவெங்காயத்தின் விலை உயர்வால், மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இதற்காக, 36 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டு ?உள்ளது. இதில், 18 ஆயிரத்து, 500 டன் வெங்காயம், வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு வந்து விட்டது. ஆனாலும், இதுவரை, 2,000 டன் வெங்காயம் மட்டுமே, மாநில அரசுகள் சார்பில் வாங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வெங்காயத்தை வாங்குவதற்கு, எந்த மாநில அரசும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வெங்காயத்தின் விலை குறையாமல் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X