பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி முந்திரி மேம்பாட்டு கழக தலைவருக்கு பாராட்டு விழா

Added : ஜன 15, 2020
Advertisement
 மாஜி முந்திரி மேம்பாட்டு கழக தலைவருக்கு பாராட்டு விழா

பண்ருட்டி:தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், ஓய்வு பெற்ற முந்திரி மேம்பாட்டு கழக தலைவருக்கு பாராட்டு விழா புதுச்சேரியில் நடந்தது.
கேரளா மாநிலம் கொல்லத்தில் முந்திரி ஏற்றுமதி தர கவுன்சில் ஆப் இந்தியாவின், முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் பூதேஷ் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா, புதுச்சேரியில் நடந்தது.முந்திரி ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் செல்வமணி வரவேற்றார்.
முந்திரி மேம்பாட்டு கழக தலைவர் நூர்தீன் அப்துல், பெங்களுர் கேஷ்யூ இன்போ தலைமை அதிகாரி ஸ்ரீவாட் சவா, ஆந்திர மாநில முந்திரி சங்க தலைவர் பாணிராகவலு, இட் கேஷ்யூஸ் சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொருளாளர் செல்வமணி, வி.எம்.கேஷ்யூஸ் வீர விஸ்வாமித்திரன் நினைவு பரிசு வழங்கினர். ஜெயமூர்த்தி, மலர்வாசகம், எழில், பாலகிருஷ்ணன், முந்திரி ஏற்றுமதியாளர்கள் பாரதிதாசன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X