பொது செய்தி

தமிழ்நாடு

யானைக்கால் வீக்கம் பராமரிப்பு முகாம்

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார்:கடலுார் அரசு மருத்துவமனையில், யானைக்கால் வீக்கம் உள்ளவர்களுக்கு பராமரிப்பு முகாம், தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்டம் சார்பில் நடந்தது.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் எழில் மதனா முன்னிலை வகித்தார். கால் வீக்கம் உள்ள 75 பேர் முகாமில் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது, நோய் ஏற்பட்டால் அதை சரி செய்வது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.கால் கழுவும் முறை பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதுமாவட்ட நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் மனோகரன், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, இளநிலை பூச்சியல் வல்லுநர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X