பொது செய்தி

தமிழ்நாடு

சி.கே.குழும பள்ளிகள் சார்பில் ஷாஸாம் கலை உற்சவம்

Added : ஜன 15, 2020
Advertisement
 சி.கே.குழும பள்ளிகள் சார்பில் ஷாஸாம் கலை உற்சவம்

கடலுார்:கடலுார் சி.கே.குழும பள்ளிகள் சார்பில் ஷாஸாம் என்ற இசை நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
கடலுார் சி.கே.குழும பள்ளிகள் சார்பில், ஷாஸாம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 1,534 பேர் கலந்து கொண்டனர்.பாடகர் ஸ்ரீராம் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சி.கே. குழும பள்ளிகளின் இயக்குநர் அமுதா பேசும்போது, சங்கீத உற்சவம், கலை சங்கம் நிகழ்ச்சி இந்தாண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டு, 'ஷாஸாம்' என பெயர் மாற்றப்பட்டு நடத்தப்படுகிறது.இளம் சாதனையாளர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே ஷாஸாம் நிகழ்ச்சியின் நோக்கம். இந்தாண்டு புதிதாக கலை நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு நடத்தப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X