பொது செய்தி

தமிழ்நாடு

ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement

பெண்ணாடம்:எடையூர் - பெரம்பலுார் இடையே ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த எடையூர் - பெரம்பலுார் இடையே உள்ள ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் வழியாக கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, நரசிங்கமங்கலம், எரப்பாவூர், அருகேரி, கொத்தட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அன்றாட தேவைகளுக்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.மழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இரு கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். இதனால் மதுரவல்லி, சிறுமங்கலம், கோவிலுார், எடையூர் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் செல்ல 10 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் சென்று, அங்கிருந்து விருத்தாசலம் செல்ல வேண்டும்.இதேபோல், பெரம்பலுார், கொடுக்கூர் கிராம மக்கள் பெண்ணாடம் வர 15 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் சென்று அங்கிருந்து பெண்ணாடம் வர வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதால் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர்.எனவே, எடையூர் - பெரம்பலுார் இடையே ஓடையின் குறுக்கே புதிதாக மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X