கோவில் சாலை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் கடும் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் சாலை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் கடும் அவதி

Added : ஜன 15, 2020
 கோவில் சாலை ஆக்கிரமிப்பு: பக்தர்கள் கடும் அவதி

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் செல்லும் வழியை மாவட்ட நிர்வாகம் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் வரும் 17ம் தேதி, காணும் பொங்கல் அன்று கரிநாள் திருவிழா நடப்பது வழக்கம்.இந்த திருவிழாவிற்கு சுற்று பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்த கோவிலுக்கு சி.என்.பாளையம் பஸ் நிலையத்திலிருந்து சிலம்பிநாதன்பேட்டை செல்லும் வழியாக தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.இந்த ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், எதிரில் வரும் வாகனங்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டு, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.ஆகையால் அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை சரி செய்திட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X