சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் தட்டுப்பாடு மக்கள் சாலை மறியல்

Added : ஜன 15, 2020
Advertisement

புவனகிரி:புவனகிரி அருகே, குடிநீர்த்தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட வாழக்கொல்லை காலனியில் குடி நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புவனகிரி பேரூராட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த வாழக்கொல்லை காலனி பொதுமக்கள், நேற்று கடலுார்-புவனகிரி சாலையில் தம்பிக்கு நல்லான்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். அதன் பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த மார்க்கத்தில் 15 நிமிடம் போக்குவரத்து தடை பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X