பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு உபகரணம் வழங்கல்

Added : ஜன 15, 2020
Share
Advertisement
 விளையாட்டு உபகரணம் வழங்கல்

கடலுார்:கடலுார் ஊராட்சி ஒன்றியம் கீழ்குமாரமங்கலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் சம்பத் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளி கொணரவும், தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இரு பாலருக்கும் தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.கடலுார் ஊராட்சி ஒன்றியம் கீழ்குமாரமங்கலம் ஊராட்சியில் ஆண்கள், பெண்களுக்கென விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது.கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் பக்கிரி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். அமைச்சர் சம்பத் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, உபகரணங்களை வழங்கினார்.முன்னாள் சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, சேவல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X