கடலுார்:படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சி, அதற்கும் மேலான கல்வித்தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்து, 31.12.2019 அன்றைய நிலையில், 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத் திறனாளிகளை பொறுத்த மட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தின் கீழ் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2019 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் பிப்ரவரி 28 ம் தேதி வரை, அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE