சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசுக்கு மிரட்டல் வாலிபர் கைது

Added : ஜன 15, 2020
Advertisement
 போலீசுக்கு மிரட்டல்  வாலிபர் கைது

விருத்தாசலம்:போதையில் வந்ததால் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் கடைவீதி நான்கு முனை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த பெண்ணாடம் முருகன் குடியை சேர்ந்த குமரவேல், 31 மதுபோதையில் இருந்தார்.அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், சாலையின் குறுக்கே அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன், போலீசாருக்கு மிரட்டல் விடுத்தார்.சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, குமரவேலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X