கலைமகள் பள்ளியில் விளையாட்டு போட்டி| Dinamalar

கலைமகள் பள்ளியில் விளையாட்டு போட்டி

Added : ஜன 15, 2020
 கலைமகள் பள்ளியில் விளையாட்டு போட்டி

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழாவை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
கலைமகள் கல்வி குழும நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். கிட்ஸி பள்ளி தாளாளர் முத்து நவநீதம் அம்மையார், பொங்கலிட்டார். பானை உடைத்தல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்வி குழும செயலாளர் அரிமா பாலறாவாயன் பரிசு வழங்கினார். முதல்வர் யோகானந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X