தமிழ்நாடு

உழவர் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சிப்பொங்கல்: பெய்யெனப் பெய்த மழையால் உற்சாகம்!

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
உழவர் உள்ளம், இல்லம், மகிழ்ச்சிப்பொங்கல்,மழை, உற்சாகம்

கோவை:கோவை மாவட்டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை கை கொடுத்ததால், விவசாயிகள் உள்ளங்களிலும், இல்லங்களிலும், இந்தாண்டு மகிழ்ச்சிப் பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக பெய்தாலும், நல்ல விதமாக பெய்தது. அதன் பயனாக, கோவையில், நொய்யல் மட்டுமின்றி, அனைத்து சிற்றாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. வழியோர குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பின.தொடர்ந்து வந்த வடகிழக்கு பருவமழையும், வழக்கத்தை காட்டிலும், 29 சதவீதம் கூடுதலாக பெய்து, விவசாயிகளுக்கு கை கொடுத்தது.

அடுத்தடுத்து இரு பருவங்களிலும் பெய்த கூடுதல் மழையால், மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2017ல் இருந்ததை காட்டிலும், 5 மீட்டருக்கும் மேல் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழும் வகையில், இந்தாண்டு நல்ல விலையும் கிடைத்துள்ளது. குறிப்பாக, வெங்காயம் சாகுபடி செய்த, இருப்பு வைத்திருந்த விவசாயிகள் அனைவருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

அது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்துடன், மத்திய அரசு கொண்டு வந்த, 'கிஸான் சம்மான் நிதி' திட்டமும், இந்தாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு மூன்று தவணையாக, தலா, 2000 வீதம், நிதியுதவி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 64,000 விவசாயிகள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.இப்படி பல்வேறு அம்சங்களிலும், கடந்தாண்டு விவசாயிகளுக்கு நல்ல படியாகவே அமைந்திருந்தது.இதனால், உழவர்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், இந்தாண்டு மகிழ்ச்சிப்பொங்கல் பொங்குகிறது!


நோய்நொடி இல்லாத ஆண்டு!



விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், 1992க்கு பிறகு இந்தாண்டில், இரு பருவங்களிலும் நல்ல மழை பெய்தது. பயிர்கள் செழித்தன. விவசாயிகள் உள்ளம் நிறைந்தது. கால்நடை தீவனம், தேவையான அளவு கிடைத்தது. ஆண்டுதோறும் கால்நடைகளை தாக்கும் நோய்கள், இந்தாண்டு இல்லை. உழவர்களுக்கு பல்வேறு வகையிலும், இந்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டுதான்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X