பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலையால் பொங்கல் நாளில் மகிழ்ச்சி !

Added : ஜன 15, 2020
Advertisement
 காய்கறி விலையால் பொங்கல்  நாளில் மகிழ்ச்சி !

பேரூர்:பருவமழைகள் கைகொடுத்ததன் காரணமாக, காய்கறி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுதும் கடந்த ஆண்டு, பருவமழைகள் அடுத்தடுத்து பொழிந்தன. அச்சமயத்தில் சேதம், நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் சின்னவெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது.தற்போது, மழையால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி, காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது.

பொதுவாக, பொங்கல் சமயத்தில் அவரை, அரசாணி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரிக்கும். ஆனால், பல பகுதிகளில் இருந்து வரத்து அதிகரித்ததால், காய்கறி மார்க்கெட் களில் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.நேற்று, பூலுவப்பட்டி சந்தையில், டன் கணக்கில் காய்கறி வரத்து இருந்தது. சின்னவெங்காயம் உட்பட எந்த காய்கறியின் விலையும், கிலோ, ரூ.100க்கு மேல் அதிகரிக்கவில்லை. இதனால், காய்கறி கடைகளில் பொங்கல் விற்பனை களைகட்டி உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காய்கறி விலை; நேற்றைய நிலவரம்(பூலுவப்பட்டி காய்கறி மார்க்கெட்)

தக்காளி (ஒரு டிப்பர்): ரூ.150 - 180

சின்னவெங்காயம் கிலோ: ரூ.80 - 100

பெரியவெங்காயம் கிலோ: ரூ.45 - 50

அவரை கிலோ: ரூ.40 - 50

அரசாணி கிலோ: ரூ.20 - 35

பச்சை மிளகாய்: ரூ. 15 - 22

புடலை கிலோ: ரூ. 8 - 10

துவரை கிலோ: ரூ. 20 - 25

பச்சை அவரை கிலோ: ரூ. 25 - 35

கத்தரி கிலோ: ரூ.70 - 80

காளிபிளவர்: ரூ. 10 - 15

முட்டைகோஸ்: ரூ. 10 - 15

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X