மதுபாட்டில் கடத்திய இருவர் கைது | Dinamalar

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

Added : ஜன 15, 2020
Share
காரைக்கால்:மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பட்டினத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.அதில், பைக்கில் மூன்று மூட்டைகளில் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில்,

காரைக்கால்:மதுபாட்டில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பட்டினத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.அதில், பைக்கில் மூன்று மூட்டைகளில் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் நாகை மாவட்டம், பெருங்கடம்பனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஷ்,20; மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் வீரபாண்டியன்,19; என்பது தெரிய வந்தது.அதன்பேரில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களையும் பறிமுதல் செய்த மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் பைக் ஆகியவற்றை கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X