பொது செய்தி

தமிழ்நாடு

மங்கள வாத்தியங்கள் முழங்க... சமயக்குரவர்கள் நால்வர் வீதி உலா!

Added : ஜன 15, 2020
Advertisement
 மங்கள வாத்தியங்கள் முழங்க... சமயக்குரவர்கள் நால்வர் வீதி உலா!

கோவை:திருமுறையை உலகுக்கு அருளிய, சைவ சமயக்குரவர் நால்வர் திருவீதி உலா, மங்கள வாத்தியங்கள் முழங்க, நடந்தது.

சைவ சமயக்குரவர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் அருளியது, தமிழ்வேதம் என்றழைக்கப்படும் திருமுறை. மார்கழி இறுதி நாளான நேற்று, திருமுறை பாராயணம் நிறைவு செய்யப்பட்டது.

இதையொட்டி, சைவ சமயக்குரவர்கள் நால்வர் அலங்கரிக்கப்பட்டு, சப்பரத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டு, பக்தர்கள் புடை சூழ, மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவை நகர வீதிகளில் திருவீதி உலா வந்தனர்.முன்னதாக உப்பாரவீதியிலுள்ள, பேட்டை விஸ்வேஸ்வரசாமி கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் விசாலாட்சி அம்பாளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும், 63 நாயன்மார்களுக்கு ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, சமயக்குரவர் நால்வருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காமாட்சியம்மன் கோவில் மற்றும் கெரடி கோவிலில், மண்டகப்படி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கண்ணப்பன் ஓதுவார் தலைமையிலான குழு செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X