பொது செய்தி

இந்தியா

சம்பா பருவத்திற்கான பண்ணை பள்ளி

Added : ஜன 15, 2020
Advertisement
 சம்பா பருவத்திற்கான பண்ணை பள்ளி

காட்டேரிக்குப்பம்:ஆத்மா திட்டத்தின் கீழ் காட்டேரிக்குப்பம் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் விவசாயிகளுக்கு சம்பா நெல் பருவத்திற்கான இரண்டாவது பண்ணை பள்ளி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் வேணுகோபால் ராவ் சிறப்புரையாற்றினார்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த உழவியல் வல்லுனர் ரவி, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் தொழிநுட்பங்கள் குறித்தும், துணை இயக்குனர் சிவசுப்ரமணியன் நெற்பயிர் பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், சந்தைப்படுத்துதல் பற்றியும் விளக்கம் அளித்தார்.பண்ணை பள்ளியில் காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, சந்தைபுதுக்குப்பம், தேத்தாம்பாக்கம் மற்றும் கொடத்துர் கிராமங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், கிராம விரிவாக்க பணியாளர்கள் நாராயணசாமி, குமரன், குணசேகரன், செயல் விளக்க உதவியாளர் சவுந்தரராஜன், வீரப்பன், சேகர், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ஜெயசந்திரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X