மாவட்ட கிரிக்கெட் போட்டி  ஸ்ரீராமகிருஷ்ணா அணி வெற்றி 

Added : ஜன 15, 2020
Advertisement

கோவை:கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டிகள், கோவையின் பல்வேறு மைதானத்தில் நடந்தது.

பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த 'லீக்' போட்டியில், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 43.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 101 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பிரவீன்குமார்-43 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரீராமகிருஷ்ணா அணி, 33 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 103 ரன் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X