பாலி., மாணவர்களுக்கான கிரிக்கெட் நாச்சிமுத்து கல்லுாரி முதலிடம்

Added : ஜன 15, 2020
Advertisement

கோவை:மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் சார்பில், மண்டல பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானங்களில் நடந்தது.கோவை, பொள்ளாச்சி, ஊட்டி, மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 23 அணிகள் பங்கேற்றன.

போட்டிகள் அனைத்தும், 25 ஓவர் அடிப்படையில் நடந்தன.இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., கல்லுாரி அணிகள் மோதின.முதலில் விளையாடிய நாச்சிமுத்து கல்லுாரி அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 25 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 173 ரன் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக மதேஷ்- 50, பிரவீன்- 40 ரன் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய பி.எஸ்.ஜி., அணி, 25 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 112 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், நாச்சிமுத்து, 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டி சென்றது. தொடர்ந்து, ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி மூன்றாமிடத்தையும், உடுமலை என்.வி., பாலிடெக்னிக் அணி நான்காமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X