பொது செய்தி

இந்தியா

வளர் இளம் பருவத்தினருக்கான பயிற்சி முகாம் நிறைவு

Added : ஜன 15, 2020
Advertisement
 வளர் இளம் பருவத்தினருக்கான பயிற்சி முகாம் நிறைவு

பாகூர்:நேருயுவ கேந்திரா சார்பில் சேலியமேட்டில் நடந்து வந்த 'வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கை கல்வி' பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
புதுச்சேரி நேருயுவ கேந்திரா, சேலியமேடு காமராஜர் இளையோர் வளர்ச்சி மையம் சார்பில், 'வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கை கல்வி' என்ற தலைப்பிலான பயிற்சி முகாம், சேலியமேடு அகரம் கிட்ஸ் அகாடமியில் நடந்துவந்தது. முகாமில், சேலியமேடு, அரங்கனூர், குடியிருப்புப்பாளையம், பாகூர் பகுதிகளை சேர்ந்த 10 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவ மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.6 நாட்கள் நடைபெற்ற முகாமில், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சுகாதாரப் பணிக்கான மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் 'வளர் இளம் பருவத்தினரின் உடல் மற்றும் உள்ளம் தொடர்பான மாற்றங்கள்' என்ற தலைப்பிலும், மனோதத்துவ நிபுணர் லட்சுமணன் தன்னையறிதல், நேர்மறையான சிந்தனை, நேர மேலாண்மை, பிரச்னைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்ட வாழ்க்கை கல்வியின் 100 வகையான நிலைகள் என்ற தலைப்பில் பேசினர்.விழுப்புரம் மாவட்ட நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்கள் மூலமாகவும், புலவர் சபாபதி தலைமைத்துவம் என்ற தலைப்பிலும் பயிற்சிகள் அளித்தனர்.
பயிற்சியின் மற்றொரு அங்கமாக பங்கேற்பாளர்கள் அனைவரும் புதுச்சேரியை சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அருங்காட்சியகம், பாரதி பூங்கா, கடற்கரை, மணக்குள விநாயகர் ஆலயம், தாவரவியல் பூங்கா, வனத்துறை ஆகிய பகுதிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.முகாமின் நிறைவு விழாவிற்கு, நேருயுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
நேரு யுவகேந்திரா கணக்காளர் சக்கரவர்த்தி, பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சபாபதி, அகரம் கிட்ஸ் அகடமி தாளாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர்கள் திருநாவுக்கரசு, காவேரி, காமராஜர் இளையோர் வளர்ச்சி மையத்தினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.மன்ற செயலர் அருளரசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X