பொது செய்தி

இந்தியா

சுற்றுச்சூழல் கருத்தரங்கு பங்கேற்பு சான்று வழங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement
 சுற்றுச்சூழல் கருத்தரங்கு பங்கேற்பு சான்று வழங்கல்

பாகூர்:கொடைக்கானலில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்ற, புதுச்சேரி நலப்பணி சங்கத்தினருக்கு, முன்னாள் முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இயற்கை வரலாற்று நிறுவனம் சார்பில் கொடைக்கானல் அடுத்த செண்பகனுாரில் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாள் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடந்தது. இதில், புதுச்சேரி நலப்பணி சங்கத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன் வைத்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற புதுச்சேரி நலப்பணி சங்கத்தினருக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நலப்பணி சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
ஆலோசகர் முத்து அய்யாசாமி, துணை செயலர் வினோத்குமார், துணை தலைவர் பரிதா முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் முதல்வர் ரங்கசாமி, சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பங்கேற்ற நலப்பணி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், மண்டல அமைப்பாளர் விஜயலட்சுமி, ராஜாராம், ஆனந்தன், குமரேசன், செல்வராஜ், துணை தாசில்தார் அய்யனார், துணை செயலர் மகேந்திரவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X