பொது செய்தி

தமிழ்நாடு

'சிலபஸ்' மாறினால் ஆசிரியர்களுக்கு பயிற்சி: அமைச்சு பணியாளர்களுக்கு கிடையாதா?

Added : ஜன 15, 2020
Advertisement

கோவை:அனைத்து விதமான அலுவலக பணிகளும் மேற்கொள்ளும் வகையில், உரிய பயிற்சி வழங்காததால், அமைச்சு பணியாளர்கள் திண்டாடுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த அமைச்சு பணியாளர்கள், இட மாறுதல் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிகளுக்கு, பிரிவு வாரியாக மாறுதல் வழங்கப்பட்டது.

பல மாதங்களாக, குறிப்பிட்ட ஒரு நபர் செய்த பணியை, புதிதாக வருவோருக்கு மாற்றும் போது, பயிற்சி அளிப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இடமாறுதல் பெற்ற அமைச்சு பணியாளர்களுக்கு, எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை.தேர்வு, நலத்திட்ட பொருட்கள் வழங்குதல், தொழில்நுட்ப பிரிவுகளில் மாறுதல் பெற்றவர்கள், எளிதில் நடைமுறைகளை உள்வாங்கி கொள்ள இயலும்.

ஆனால், கோர்ட் நடைமுறைகளை கண்காணிப்பவர்கள், உரிய நேரத்தில் தேவையான ஆவணங்கள் திரட்டி, அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.பழைய வழக்குகளின் தன்மையை அறிந்து, பதில் தர வேண்டும். இதற்கு, உரிய பயிற்சி வழங்காததால், கோர்ட் நடைமுறைகள் பின்பற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.


உடனே பயிற்சி வேண்டும்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'சிலபஸ் மாறியதும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தலைமை ஆசிரியர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், அலுவலக பணியாளர்களுக்கு, பணியிடை பயிற்சி ஏதும் வழங்காததால், புதிதாக வேலையில் சேர்ந்தோர், இடமாறுதல் பெற்றோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். விரைவில், அலுவலக பணியாளர்களுக்கும், புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X