கொள்ளை நாடகமாடிய அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு | Dinamalar

கொள்ளை நாடகமாடிய அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு

Added : ஜன 15, 2020
Share
புதுச்சேரி:கொள்ளை நாடகமாடிய அடகு கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் ராகேஷ் குமார் ஜெயின். இவர் கடந்த 2ம் தேதி தனது அடகு கடையில் ரூ. 2.50 கோடி நகை, 2.80 லட்சம் ரொக்கபணம் கொள்ளை போனதாக கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் நடந்த அடகு கடையை பார்வையிட்டபோது,

புதுச்சேரி:கொள்ளை நாடகமாடிய அடகு கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் ராகேஷ் குமார் ஜெயின். இவர் கடந்த 2ம் தேதி தனது அடகு கடையில் ரூ. 2.50 கோடி நகை, 2.80 லட்சம் ரொக்கபணம் கொள்ளை போனதாக கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவம் நடந்த அடகு கடையை பார்வையிட்டபோது, கடையில் மூன்று கதவுகளில் இருந்த 15 பூட்டுகளும் திறந்து கிடந்ததால், உரிமையாளர் மீது போலீசார் சந்தேகம் கொண்டனர்.
அதன்பேரில் ராகேஷ்குமார் ஜெயினிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கடன் தொல்லை அதிகமானதால், நகை அடகு கடை திவாலாகிவிட்டதாக கணக்கு காட்ட கடந்த ஏழு மாதங்களாக திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.இதுகுறித்த போலீசார், புதுச்சேரி கோர்ட்டில் முறையிட்டனர். கோர்ட் உத்தரவின் பேரில் பொய் புகார் அளித்தல் 182 பிரிவின் கீழ், ராகேஷ்குமார் ஜெயின் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X