பொது செய்தி

இந்தியா

மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பொங்கல் விழா கோலாகலம்

Added : ஜன 15, 2020
Advertisement
 மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பொங்கல் விழா கோலாகலம்

புதுச்சேரி:லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லுாரியின் முதல்வர் ராணி தலைமை தாங்கினார். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பயிற்றுனர்கள் மற்றும் ஊழியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு துறைவாரியாக மாணவிகள் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, பாலிடெக்னிக் மாணவிகளுக்கான இசை நாற்காலி, உறியடித்தல், கயிறு இழுத்தல், பலுான் ஊதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும், பொங்கல் விழாவுக்கு சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். பள்ளி மாணவிகளுக்கும் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் ராணி பேசும்போது, பொங்கலின் உற்சாகம் ஆண்டும் முழுவதும் தொடர வேண்டும் என்று பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும், கடந்த சில ஆண்டுகளைவிட நடப்பு கல்வியாண்டில் தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பாராட்டும் வகையில் பேராசிரியர்களுக்கும், பயிற்றுனர்களுக்கும், ஊழியர்களுக்கும் பரிசுகளை முதல்வர் வழங்கினார். எதிர்வரும் கல்வியாண்டிலும் கல்லுாரியின் முன்னேற்றம் நிலைத்து தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X